Homeசெய்திகள்தமிழ்நாடுஇந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு - உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு

-

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு - உயர்நீதிமன்றத்தில் வழக்கு

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், இந்தி மொழி பேசாத மற்ற மாநிலங்களில் இந்தி மொழி திணிக்கப்பட மாட்டாது என்று 1959 ஆம் ஆண்டு பிரதமர் நேரு நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறி, இந்த மூன்று சட்டங்களுக்கும் இந்தியில் பெயர் சூட்டப்பட்டு, அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டங்களுக்கு இந்தியில் மட்டும் பெயர் வைத்ததன் மூலம் தமிழர்கள் மீது இந்தி திணிக்கப்பட்டுள்ளது என்றும், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் சட்டத்தை கொண்டு வந்துள்ளதாகவும்
கூறப்பட்டுள்ளது.

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு - உயர்நீதிமன்றத்தில் வழக்குஎந்த ஒரு விவாதமும் கலந்தாலோசனையும் இல்லாமல் தன்னிச்சையாக இந்த சட்டங்களை அமல்படுத்தியுள்ளதாகவும், அரசியலமைப்பு நடைமுறைகளை மீறி கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், அமல்படுத்தப்பட்ட அதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய அமர்வு, மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, ஏற்கனவே தொடரப்பட்டுள்ள வழக்குகளோடு சேர்த்து பட்டியலிட உத்தரவிட்டுள்ளது.

MUST READ