நள்ளிரவில் பூத்த பிரம்ம கமலம் பூ.. கிராம மக்கள் ஆர்வத்தோடு பார்த்து வழிப்பட்டனர்.
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் அதிசய மலர் பிரம்ம கமலம் பூ ஆகும்.இதன் வாசனை மிகவும் அதிகம்.இரவில் மட்டுமே மலரும் . இந்த பிரம்ம கமலம் பூ தெய்வீக தன்மை வாய்ந்ததாக நம்பப்பட்டு வருகிறது.

இந்த பூவின் பூர்வீகம் இமாச்சலப் பிரதேசம்.உத்ரகாண்டின் மாநில மலர் பிரம்ம கமலம் பூ ஆகும்.இது ஒரு கள்ளி வகையைச் சார்ந்தது.தண்ணீர் அதிகமாக ஊற்றத்தேவையில்லை.பத்ரீநாத் போன்ற கோவில் திருத்தலங்களில் பிரசாதமாகவும் வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
போச்சம்பள்ளியை அடுத்த கொடிமேன அல்லி கிராமத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் அதிசய மலர் பிரம்ம கமலம் பூ பூத்துள்ளதை படையலிட்டு வழிபட்ட குடும்பத்தினர்.இதனை அறிந்த கிராம மக்கள் பூவினை வந்து பார்த்துச் சென்றனர்.
இந்த பூவனாது இரவில் மட்டுமே பூக்கும்.காலையில் வாடிவிடும். போச்சம்பள்ளியை அடுத்த கொடிமேன அல்லி கிராமத்தில் வசித்து வருபவர் தருமன். விவசாயம் செய்துவருகிறார்.இவர் வெளியூர் சென்று வரும் போது தனது நண்பர் பரிசாக கொடுத்த செடியை வீட்டில் வைத்து வளர்த்துள்ளார்.இந்த செடியினை நன்றாக பராமரித்தும் உள்ளார்.மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மொட்டாக இருந்த பூ நேற்று இரவு 10 மணியளவில் மலர்ந்தது.அதிக மணத்தையும் வெளிப்படுத்தியது.இதை எதிர்ப்பார்த்து காத்திருந்த தருமன் குடும்பத்தினர் படையலிட்டு வழிபட்டனர்.
இதை அறிந்த கிராம மக்கள் அனைவரும் வந்து அதிசய மலரை பார்த்துச் சென்றனர். பிரம்ம கமலம் பூ இமயமலையில் மட்டுமே பூக்கும் ஒரு அதிசய மலர் என்றே புறானங்களில் கூறப்பட்டுள்ளது.ஆனால் இந்தச் செடியினை நன்கு பராமரித்து வளர்த்தால் அனைத்துப் பகுதிகளிளும் வளர்க்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.இந்த செடியின் தண்டினை வைத்தால் கூட வளரும் தன்மையுடையது.மணிப்லானேட் செடி போலவே இதுவும் வீடுகளில் நன்மையை உண்டாக்கும் .