spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅண்ணாமலை வெற்றி பெறுவார் - பந்தயம் விட்ட நபர் நடுரோட்டில் மொட்டை!

அண்ணாமலை வெற்றி பெறுவார் – பந்தயம் விட்ட நபர் நடுரோட்டில் மொட்டை!

-

- Advertisement -

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பந்தயத்தில் தோல்வியடைந்த பாஜக நிர்வாகி நடுரோட்டில் மொட்டை அடித்து கொண்ட சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே முந்திரித்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் . இவர் உடன்குடி ஒன்றிய பாஜக மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இதில் அவர் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதே ஊரைச் சேர்ந்த மாற்றுக் கட்சி நபரிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் கண்டிப்பாக வெற்றி பெறுவார். அப்படி வெற்றி பெறவில்லை என்றால் பரமன்குறிச்சி பஜாரில் நடுரோட்டில் மொட்டை போட்டு ரவுண்டானாவை சுற்றி வருவேன் என சவால் விட்டிருந்தார்.

இதனையடுத்து மக்களவைத் தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தோல்வியடைந்ததால் பாஜக பிரமுகர் ஜெய்சங்கர். நேற்று பரமன்குறிச்சி பஜாரில் நடுரோட்டில் மொட்டை அடித்துக் கொண்டார். பின்னர் மொட்டை அடித்த பின்னர் பந்தயத்தில் தோற்றதற்காக ரவுண்டானாவை சுற்றி வந்த வினோத சம்பவத்தை பொதுமக்கள் கூடியிருந்து வேடிக்கை பார்த்தனர்.

MUST READ