Homeசெய்திகள்தமிழ்நாடுவரி ஏய்ப்பு புகார்- 30 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

வரி ஏய்ப்பு புகார்- 30 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

-

- Advertisement -

தனியார் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.

raid

we-r-hiring

தனியார் ஹோட்டல் நிறுவனங்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை அசோகா ரெசிடென்சி ஹோட்டலின் உரிமையாளரின் அண்ணா நகரில் உள்ள வீடு மற்றும் போரூரில் அமைந்துள்ள அவரது ஹோட்டல் ஆகியவற்றில் வருமானவரித் துறையினர் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல ஆதித்யா ராம் மற்றும் அம்பாலால் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம், மணலி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகின்றன. வரி ஏய்ப்பு புகார் வந்ததை தொடர்ந்து வருமானவரி துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

MUST READ