spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவிபத்தில் உயிரிழக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்வு

விபத்தில் உயிரிழக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்வு

-

- Advertisement -

விபத்தில் உயிரிழக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்வு

விபத்தினால் உயிரிழக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

tamilnadu assembly

மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மூலம் வழங்கப்பட்டு வரும் நிவாரணத்தை தமிழநாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் விபத்தில் உயிரிழக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நிவாரணம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2லட்சமாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கை, கால், கண்பார்வை இழப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாற்றத்திறனாளிகளின் மகன் / மகளுக்கான உதவித்தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விடுதியில் தங்கி பயிலும் மகன் / மகளுக்கு வழங்கபடும் நிவாரணத்தொகை ரூ.1,200 லிருந்து ரூ.2,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

கடந்த 2 தினங்களுக்கு முன் சமூக நல பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000 லிருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படுமென அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

MUST READ