இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குப் பாலம் ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் கடல் பகுதியில் அமைந்துள்ளது. தெற்கு ரயில்வே பகிர்ந்த அழகிய காட்சிகள்!
ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடல் பகுதியில் ₹550 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரட்டை வழித்தட மின்சார ரயில் பாலமானது இறுதிக்கட்ட பணிகள் முடிந்து சோதனை ஓட்டத்திற்கு தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
கப்பல் கடந்து செல்லும் கால்வாய் மேல் சுமார் 700 டன் எடையில் பொருத்தப்பட்டுள்ள இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குப்பாலத்தில் லிப்டிங் சோதனை நேற்று மாலை நடந்தது. கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி 15 மீட்டர் உயரம் வரையில் தூக்கி சோதனை செய்தனர்.
இதையடுத்து கடந்த ஒரு வாரமாக நடந்து வந்த லிப்டிங் பணி முதல்கட்டமாக வெற்றிகரமாக முடிந்தது. தொடர்ந்து சில தினங்களில் ரயில் பெட்டிகளை இயக்கி சோதனை செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.