spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"பிரதமராகும் எண்ணம் இருக்கிறதா?"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!

“பிரதமராகும் எண்ணம் இருக்கிறதா?”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!

-

- Advertisement -

 

"கனிமொழி பேச்சால் அண்ணனாகப் பெருமைப்படுகிறேன்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
Photo: dmk

பிரதமராகும் லட்சியம் இருக்கிறதா என்ற கேள்விக்கு தன் உயரம் நன்றாகத் தெரியும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான சுரேஷ் கோபி செயலுக்கு கடும் எதிர்ப்பு!

‘ETVBharat’ என்ற தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “எங்களைப் பொறுத்த வரை நாங்கள் எந்த ஒரு மொழிக்கும் எதிரிகள் அல்ல. எங்கள் மொழி மீது எந்தவொரு மொழியைத் திணித்தாலும் அதை உறுதியாக எதிர்ப்போம். காவிரியில் தமிழகத்தின் உரிமையைக் காப்பதில் எனது அரசு என்றும் உறுதியாக இருக்கும்.

பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி முறிந்தாலும், முறியா விட்டாலும் எங்களுக்கு கவலை இல்லை. இந்தியா முழுமைக்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பை மத்திய அரசு விரைந்து நடத்தி முடிவுக்கு வேண்டும். தமிழ்மொழி, தமிழ்நாடு வளர்ச்சிக்கு ஆளுநர் மூலம் முட்டுக்கட்டைப் போடப்படுகிறது. ஒன்பது ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு பா.ஜ.க. செய்த சாதனைகள் ஏதுமில்லை. பா.ஜ.க. அரசின் தோல்வியைத் திசைத் திருப்பவே இந்து சமய அறநிலையத்துறையை விமர்சிக்கின்றனர்” என்று குற்றம் சாட்டினார்.

‘அயோத்தி ராமர்கோயில்’- காங்கிரஸ் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு!

பிரதமராகும் லட்சியம் இருக்கிறதா என்ற கேள்விக்கு தன் உயரம் நன்றாகத் தெரியும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கர்நாடக தேர்தல் வெற்றி மூலம் இந்திய கூட்டணி முதல் ரவுண்ட் வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்தியா கூட்டணியின் வலிமை மத நல்லிணக்கம்; பா.ஜ.க.வின் மதவாத அரசியலுக்கு எதிராக ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைப்பதே எங்களது உத்தி” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ