spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"சென்னையில் வரும் ஜனவரியில் சர்வதேச புத்தகக் கண்காட்சி"- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு!

“சென்னையில் வரும் ஜனவரியில் சர்வதேச புத்தகக் கண்காட்சி”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு!

-

- Advertisement -

 

"சென்னையில் வரும் ஜனவரியில் சர்வதேச புத்தகக் கண்காட்சி"- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு!
Photo: Minister Anbil Mahesh

அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் மூன்று நாட்களுக்கு சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

we-r-hiring

விரைவில் மதுரையில் மாநாடு! விஜய் அழைக்கிறார்

சர்வதேச புத்தகக் கண்காட்சி குறித்த அறிமுக நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று (ஜூன் 07) நடைபெற்றது. அப்போது, 2024- ஆம் ஆண்டு நடைபெறும் சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கான ஒளி, ஒலிக் காட்சித் திரையிடப்பட்டு, தேதி அறிவிக்கப்பட்டது.

அதன்படி, வரும் ஜனவரி 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தகக் கண்காட்சி என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

அமமுக – அதிமுக இணைந்து செயல்பட தொடங்கிவிட்டது: டிடிவி தினகரன்

நடப்பாண்டில் முதல் முறையாக சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெற்ற நிலையில், சிங்கப்பூர், மலேசியா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தமிழ் அமைப்புகள், பதிப்பகங்கள், புத்தகங்களைக் காட்சிப்படுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ