spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபோதையில் வடமாநிலத்தவர்கள்...தட்டிக்கேட்ட போலீசுக்கு விழுந்த அடி

போதையில் வடமாநிலத்தவர்கள்…தட்டிக்கேட்ட போலீசுக்கு விழுந்த அடி

-

- Advertisement -

சேலம் மாவட்டம்மேட்டூர் அருகே தமிழக எல்லையில் தமிழக போலீசார் மீது வடமாநிலத்தவர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

போதையில் வடமாநிலத்தவர்கள்...தட்டிக்கேட்ட போலீசுக்கு விழுந்த அடிதமிழக கர்நாடக எல்லையில் காரைக்காடு மதுவிலக்கு சோதனை சாவடியில் வட மாநிலத்தவர் தாக்கியதில் இரண்டு போலீசார் காயம் அடைந்துள்ளனர். மேட்டூர் அருகே தமிழக எல்லையில் அமைந்துள்ளது காரைக்காடு மதுவிலக்கு சோதனை சாவடி.

we-r-hiring

கர்நாடகாவில் இருந்து நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் தமிழக எல்லையில் உள்ள இந்த சோதனை சாவடியை கடந்து செல்கின்றன. இதேபோல் மற்ற மாநிலங்களை சேர்ந்த வாகனங்களும் இந்த சோதனை சாவடியை கடந்து கர்நாடக மாநிலம் செல்கின்றன.

போதையில் வடமாநிலத்தவர்கள்...தட்டிக்கேட்ட போலீசுக்கு விழுந்த அடி

இங்குள்ள சோதனை சாவடியில் மலிவு விலையில் மது , கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் போலீசாரின் வாகன சோதனைகள் அடிக்கடி சிக்குகின்றன.

இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் இருந்து வந்த சொகுசு பேருந்து மேட்டூர் வழியாக கர்நாடக மாநிலம் சென்று கொண்டிருந்தது. அப்போது காரைக்காடு மதுவிலக்கு சோதனை சாவடி போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மது போதையில் இருந்த வட மாநிலத்தவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதில் சுகனேஸ்வரன், செந்தில்குமார் இரண்டு காவலர்கள் காயம் அடைந்தனர்.

இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் போலீசாருக்கு ஆதரவாக வட மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் வட மாநிலத்தை சேர்ந்த 4 பேர் காயம் அடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பான கொளத்தூர் போலீஸ் வட மாநிலத்தைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எல்லாம் செட்டிங்கா மல..? சாட்டையை மாற்றிய அண்ணாமலை..! வெளுத்தது சாயம்..!

MUST READ