Homeசெய்திகள்தமிழ்நாடுவைரமுத்துவை கைது செய்ய சொல்வது குற்றமா? நிருபரிடம் சீறிய அண்ணாமலை

வைரமுத்துவை கைது செய்ய சொல்வது குற்றமா? நிருபரிடம் சீறிய அண்ணாமலை

-

முதல்வருடன் இருப்பதால் வைரமுத்துவை கைது செய்ய சொல்வது குற்றமா? நிருபரிடம் சீறிய அண்ணாமலை
vairamuthu mk stalin

பாடகி சின்மயி உள்ளிட்ட 17 பெண்களின் பாலியல் குற்றச்சாட்டில் கவிஞர் வைரமுத்துவை பாஜக கைது செய்ய சொல்வது குற்றமா? என்று நிருபரிடம் சீறினார் அண்ணாமலை.

மீ டூ இயக்கத்தின் மூலமாக கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தார் பாடகி சின்மயி. அவரைத் தொடர்ந்து மேலும் பல பெண்கள் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். ஆனால் இதுவரைக்கும் வைரமுத்து அது குறித்து எதுவும் பேசாமல் மௌனமாகவே கடந்து சென்று வருகிறார்.

சின்மயி மட்டும் அவ்வப்போது வைரமுத்து விவகாரத்தில் தொடர்ந்து தனது ஆத்திரத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார். இதனால் கேரள மாநிலத்தின் உயரிய விருது வைரமுத்துவிற்கு கிடைக்காமல் போய்விட்டது. பல சந்தர்ப்பங்களில் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்துக் கொண்டு வருகிறார் சின்மயி.

முதல்வருடன் இருப்பதால் வைரமுத்துவை கைது செய்ய சொல்வது குற்றமா? நிருபரிடம் சீறிய அண்ணாமலை
chinmayi

தங்களின் குற்றச்சாட்டில் வைரமுத்து தண்டிக்கப்பட வேண்டும் என்பதே சின்மயியின் வேண்டுகோளாக இருக்கிறது. ஆனால் அவர், திமுகவினருடன், குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் உடன் நெருக்கமாக இருப்பதால் அவரைப் பற்றி தொடர்ந்து பேச தன்னை மாதிரி உள்ள மற்ற பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சப்படுகிறார்கள். இத்தனை பேரும் வைரமுத்து மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் இதை புரிந்து கொண்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் . அப்படி இல்லை என்றால் அவரை திமுகவில் இருந்தாவது ஒதுக்கி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

திமுக எம்பி கனிமொழிக்கும் அவர் இதே கோரிக்கை வைத்திருக்கிறார்.

சின்மயி உள்ளிட்ட அந்த 17 பெண்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு வைரமுத்துவை கைது செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. இது குறித்த நிருபரின் கேள்விக்குத்தான் அண்ணாமலை அப்படிச் சீறினார்.

MUST READ