spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஜெகத்ரட்சகன் எம்.பி. வீட்டில் அமலாக்கத்துறை!

ஜெகத்ரட்சகன் எம்.பி. வீட்டில் அமலாக்கத்துறை!

-

- Advertisement -

 

"அமைச்சர் பொன்முடி வீட்டில் ரூபாய் 95 லட்சம் பறிமுதல்"- அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!
File Photo

ஜெகத்ரட்சகன் எம்.பி. வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், அங்கு திடீரென வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

we-r-hiring

“இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்”- இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்!

முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான சொகுசு விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரிகள், வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 30- க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்றாவது நாளாக தொடர்ந்து அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, அடையாறு கஸ்தூரி பாய் பிரதான சாலையில் உள்ள ஜெகத்ரட்சனின் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் இரண்டு கருப்பு நிறப்பைகளில் இருந்த ஆவணங்களை அந்த பைகளுடன் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ஜெகத்ரட்சகனின் இல்லத்திற்கு திடீரென வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், அங்கு வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ரூ.2000 நோட்டுக்களை வங்கியில் மாற்ற இன்றே கடைசி நாள்!

வருமான வரித்துறையினர் அளித்த தகவலின் பேரில், அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜெகத்ரட்சகன் வீட்டில் முகாமிட்டுள்ளதாக தகவல் கூறுகின்றனர். வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையின் அதிரடி நடவடிக்கை, தி.மு.க. பிரமுகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ