spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபள்ளிகளில் பாஜகவின் திட்டங்களை போட்டியாக நடத்தும் விவகாரம்... மத்திய அரசுக்கு, கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

பள்ளிகளில் பாஜகவின் திட்டங்களை போட்டியாக நடத்தும் விவகாரம்… மத்திய அரசுக்கு, கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

-

- Advertisement -
பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் பாஜகவின் திட்டங்களை  போட்டியாக நடத்தும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் – வரும் அக்டோபர் 7 – 11 வரையிலான காலகட்டத்தில் ஒரு தேசம் ஒரு தேர்தல், விக்‌ஷ்த் பாரத் போன்ற பாஜகவின் திட்டங்களை மாணவர்களிடையே போட்டியாக நடத்த வேண்டும் என ஒன்றிய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் பாஜக/ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை பரவலாக்க முன்னெடுக்கும் இந்த முயற்சியை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ள பாலகிருஷ்ணன், மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை பள்ளிகளின் மேம்பாட்டுக்கு தர மறுக்கும் இதே பாஜக, தன்னுடைய ஆபத்தான கொள்கைத் திட்டங்களை கொண்டு செல்ல பள்ளிகளை பயன்படுத்துவது மிக ஆபத்தான மாணவர் விரோத போக்காகும் என குற்றம்சாட்டியுள்ளார்.
கே.பாலகிருஷ்ணன்
மேலும் இந்த முடிவை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள பாலகிருஷ்ணன், இதுபோன்ற தலையீடுகளை மாநில அரசு முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், ஆசிரியர், மாணவர்களும் இதுபோன்ற முயற்சிகளை எதிர்க்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

MUST READ