spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகலைஞர் பிறந்தநாள் - பள்ளி குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல்

கலைஞர் பிறந்தநாள் – பள்ளி குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல்

-

- Advertisement -

கலைஞர் பிறந்தநாள் சார்பாக பள்ளி குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்க உத்தர பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் நூற்றாண்டு நிறைவையொட்டி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளான வரும் திங்கட்கிழமை அனைத்து பள்ளிகளிலும் சர்க்கரைப் பொங்கல் வழங்க சமூக நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

we-r-hiring

கலைஞர் பிறந்தநாள் - பள்ளி குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல்

தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் ஜூன் 10 ஆம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

சத்துணவு திட்டத்தில் பயன் பெற்று வரும் குழந்தைகளுக்கு காமராஜர், அண்ணா புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதாவின் பிறந்தநாள் தினத்தில்  இனிப்பு பொங்கல் வழங்கப்படுவது போல இனிவரும் காலங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் பிறந்தநாள் நாட்களில் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்படும் என ஏப்ரல் 14 ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

கலைஞர் பிறந்தநாள் - பள்ளி குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல்

அதனை தொடர்ந்து ஜூன் 3 ஆம் தேதி விடுமுறை விடப்பட்டதை அடுத்து ஜூன் 10 ஆம் தேதி  பள்ளி மாணவர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதற்காக நாள்தோறும் சத்துணவிற்கு பயன்படுத்தப்படும் அளவில் அரிசியை பயன்படுத்தவும் செலவினம் வழங்கியும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

MUST READ