spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகாளையார்குறிச்சி வெடி விபத்து - உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4-ஆக உயர்வு

காளையார்குறிச்சி வெடி விபத்து – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4-ஆக உயர்வு

-

- Advertisement -

சிவகாசி அருகே காளையார்குறிச்சி வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.

we-r-hiring

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த பட்டாசு ஆலையில் கடந்த 9-ந் தேதி திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் விபத்து நடத்த இடத்தில் ஒரு அறை முழுவதுமே தரைமட்டமானது. இதில் மாரியப்பன் (45), முத்துமுருகன் (45) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகியுள்ளனர். அத்துடன் 2 பேர் படுகாயமடைந்தனர்.

மேலும் இவ்விபத்தில் பலத்த காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.புதுப்பட்டியைச் சேர்ந்த சங்கரவேல், சரோஜா ஆகியோர் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் கடந்த 9ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழப்பு 4 ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் தீக்காயமடைந்த சரோஜா, சங்கரவேல் ஆகிய இருவரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

MUST READ