spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவிஷச்சாராயம் குடித்து மருத்துவமனையில் உள்ள 90 பேரின் உடல்நிலை முன்னேற்றம்!

விஷச்சாராயம் குடித்து மருத்துவமனையில் உள்ள 90 பேரின் உடல்நிலை முன்னேற்றம்!

-

- Advertisement -

விஷச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள 90 பேரின் உடல் நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

we-r-hiring

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல், கை-கால் மருத்துபோதல், கண் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பலரும் அருகிலுள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 30-க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக சேலம், புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுவரை 59 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், விஷச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள 90 பேரின் உடல் நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விஷச்சாராயம் குடித்து மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சையில் உள்ள 156 பேரில், 90 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், விஷச் சாராயம் குடித்து இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர்.

MUST READ