spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிடும் நேரம் நீட்டிப்பு!

கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிடும் நேரம் நீட்டிப்பு!

-

- Advertisement -

 

கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிடும் நேரம் நீட்டிப்பு!
Photo: TN Govt

வார இறுதி நாட்களில் கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிடும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

விரைவில் 7 ஜி ரெயின்போ காலனி 2…… கதாநாயகி யார் தெரியுமா?

சிவகங்கை மாவட்டம், கீழடியில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் 9- ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதனை காண பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் எப்போதும் கீழடியில் உள்ள அருங்காட்சியகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்த நிலையில், அருங்காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, பார்வையிடும் நேரத்தை காலை 10.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை நீட்டித்து தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இது நீள் இரவு……. அதர்வா, மணிகண்டன் கூட்டணியின் மத்தகம்….. டீசர் வெளியானது!

தற்போது வாரந்தோறும் வெள்ளிக்கிழமை விடுமுறையாக இருக்கும் நிலையில், இனி செவ்வாய்க்கிழமை வார விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 1- ஆம் தேதி முதல் இந்த புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ