spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகீழடி அருங்காட்சியகம் – மாணவர்களுக்கு முதல்வர் அழைப்பு!

கீழடி அருங்காட்சியகம் – மாணவர்களுக்கு முதல்வர் அழைப்பு!

-

- Advertisement -

கீழடி அருங்காட்சியம் திறக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் முடிவடைந்ததும் அருங்காட்சியகத்தை பார்வையிட பெற்றோர்கள் மாணவர்களை அழைத்து வாருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளாா்.கீழடி அருங்காட்சியகம் – மாணவர்களுக்கு முதல்வர் அழைப்பு!

தமிழர் தொன்மையின் தடயங்களை தேடித் தேடிக் கண்டறிந்து உலகத்திற்கு அறிவிப்போம். இந்திய துணை கண்டத்தின் வரலாற்றை தெற்கில் இருந்தே எழுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளாா்.

we-r-hiring

மேலும் அந்த பதிவில், “கீழடியின் பானை ஓடுகளில் நாம் கண்டெடுத்த தமிழி எழுத்துக்கள், கடல் கடந்து, எகிப்து நாட்டின் பிரமிடுகளிலும் இடம்பெற்றள்ள மகிழ்ச்சியை மேலும் பெருக்கிடும் வகையில், கீழடி திறந்தவெளி அருங்காட்சியத்தை திறந்து வைத்திருக்கிறேன்.

கீழடி திறந்தவெளி அருங்காட்சியத்தை மாணவர்கள் பார்வையிட வேண்டும் எனவும், தேர்வுகள் முடிந்ததும் மாணவரகளைப் பெற்றோர் அழைத்து வாருங்கள்” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தமிழனின் வணிகத்தை பறைசாற்றம் வரலாறு…

MUST READ