Homeசெய்திகள்தமிழ்நாடுடாஸ்மாக் சரக்கில் சயனைடு கலந்துகொடுத்து கொலை

டாஸ்மாக் சரக்கில் சயனைடு கலந்துகொடுத்து கொலை

-

- Advertisement -

டாஸ்மாக் சரக்கில் சயனைடு கலந்துகொடுத்து கொலை

டாஸ்மாக் சரக்கில் சயனைடு கலந்துகொடுத்து தம்பியை கொலை செய்த சகோதரர் பாஸ்கர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Death

மயிலாடுதுறை மங்கை நல்லூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் பழனிகுருநாதன்(50). இவர் கொல்லுபட்டறை வைத்து நடத்திவந்துள்ளார். இவர் வேலை பார்த்துவந்த பட்டறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் அவரை பரிசோதித்ததில், ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

அவர்கள் மயங்கிகிடந்த இடத்தில் அரசு டாஸ்மாக் மதுபாட்டில் ஒன்று திறக்கப்படாமலும், ஒரு காலிபாட்டிலும் கிடந்தது. தஞ்சை தடயவியல் ஆய்வக அதிகாரிகள் டாஸ்மாக் மதுபாட்டிலை சோதனை செய்ததில் மதுபானத்தில் சயனைட் கலந்திருப்பது தெரியவந்தது. முதல்தாரத்து மகன்கள் மனோகர், பாஸ்கர் இருவரும் சேர்ந்த இரண்டாம் தாரத்து மகனுக்கு விஷம் கொலை செய்தது தெரியவந்தது. பாஸ்கரன், மனோகர் ஆகியோரை மயிலாடுதுறை காவல்நிலையம் அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Police

பழனி குருநாதனை கொலைசெய்ய திட்டமிட்டு மயிலாடுதுறையில் நகைதயாரிக்கும் தொழில் செய்துவரும் உறவினர் ஒருவரிடம் மரத்தை பட்டுபோக செய்ய வேண்டும் அதற்காக சயனைடு வேண்டுமென்று கேட்டுவாங்கி வந்து டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் வாங்கி அதில் சயனைடு கலந்து பாட்டில் சீல் உடைக்காமல் இருப்பதுபோல் தெரியவேண்டுமென்பதற்காக பெவிக்கூயிக் போட்டு ஒட்டி கொல்லுபட்டறையில் யாருக்கும் தெரியாமல் சென்று மதுபாட்டிலை வைத்துவிட்டு வந்ததாக பாஸ்கரன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவத்தில் பாஸ்கரன்(52) என்பவருக்கு மட்டுமே தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து கொலை வழக்காக மாற்றம் செய்து பாஸ்கரனை கைது செய்து செம்பனார்கோயில் அருகே திருச்சம்பள்ளியில் அமைந்துள்ள தரங்கம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

MUST READ