
2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, மக்களவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக, இன்று (செப்.22) காலை கோவை மாவட்டத்திற்கு வந்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கட்சியின் கோவை மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், சேலம், கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

மணியம்மையார் குறித்த பேச்சு – வருத்தம் தெரிவித்தார் துரைமுருகன்
கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், “வரும் மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் இருந்து போட்டியிடுகிறேன். கோவையில் எனக்கும் பெரும் ஆதரவு இருப்பதால் மீண்டும் இங்கு போட்டியிடவுள்ளேன். மக்களவைத் தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும். ‘விக்ரம்’ படத்திற்கு கூட்டம் சேர்கிறது; மக்கள் நீதி மய்யத்திற்கு கூட்டம் சேராதா?” என்று நிர்வாகிகளிடையே கேள்வி எழுப்பினார்.
‘அக்.16- ஆம் தேதி முதல் சேலத்தில் இருந்து கொச்சின், பெங்களூரு நகரங்களுக்கு விமான சேவை!’
கடந்த முறை நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.