spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகோயம்பேடு - ஆவடி மெட்ரோ ரயிலின் புதிய வழித்தடத்தில்  பட்டாபிராம் வரை நீட்டிக்க திட்டம்!

கோயம்பேடு – ஆவடி மெட்ரோ ரயிலின் புதிய வழித்தடத்தில்  பட்டாபிராம் வரை நீட்டிக்க திட்டம்!

-

- Advertisement -

கோயம்பேடு-ஆவடி மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை ஜனவரி இறுதிக்குள் தயாராகும் எனவும் மேலும் இந்த திட்டம் பட்டாபிராம் வரை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.கோயம்பேடு - ஆவடி மெட்ரோ ரயிலின் புதிய வழித்தடத்தில்  பட்டாபிராம் வரை நீட்டிக்க திட்டம்! சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில்  (மாதவரம் – சோழிங்கநல்லூர்) வரையிலான வழித்தடத்தில்  கோயம்பேடு முதல்  ஆவடி வரை நீட்டிப்பது குறித்த டிபிஆர் இறுதி கட்டத்தில் உள்ளதால், பட்டாபிராம் வரையிலான சாத்தியக்கூறுகளும் பரிந்துரைப்படி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பட்டாபிராமில் பீக் ஹவரில் பீக் டைரக்ஷன் (PHPD) போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கு 12,000 பயணிகள் வரை பயணிப்பதாக தெரிகிறது. இது  சாத்தியமானால் ஒரு மாதத்தில் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

கோயம்பேடு முதல் ஆவடி வரையிலான தோராயமான சீரமைப்பு நீளம் 16.1 கிமீ ஆகும். இது பட்டாபிராம் வரை நீட்டிக்கப்பட்டால் கிட்டத்தட்ட 20 கிமீ ஆக அதிகரிக்கும். இதற்கு 6,500 கோடி மதிப்பிலான கட்டுமானச் செலவாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் நீளத்தில் சுமார் 15 உயர்த்தப்பட்ட நிலையங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, மேலும் இது பட்டாபிராம் வரை நீட்டிக்கப்பட்டால் கூடுதல் நிலையங்கள் சாத்தியமாகும் எனவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

we-r-hiring

மெட்ரோ டிப்போ ஆவடியில் அல்லது பட்டாபிராமில் உள்ள வெளிவட்டச் சாலை (ORR) அருகில் உள்ள காலி இடத்தில் கட்டப்படும். கோயம்பேடு, பாடி புதுநகர், வாவின், அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையம், அம்பத்தூர் ரயில் நிலையம், திருமுல்லைவாயல், ஆவடி ரயில் நிலையம் மற்றும் திருமங்கலம் அல்லது முகப்பேரில் ரயில் நிலையங்கள் அமைக்கப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.6,500 கோடி திட்டமதிப்பில் கோயம்பேடு – பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் திட்டம் துவக்கம்

MUST READ