Homeசெய்திகள்தமிழ்நாடுதிடீர் முச்சுத்திணறல்! கே.டி.ராகவன் மருத்துவமனையில் அனுமதி

திடீர் முச்சுத்திணறல்! கே.டி.ராகவன் மருத்துவமனையில் அனுமதி

-

திடீர் முச்சுத்திணறல்! கே.டி.ராகவன் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் பா.ஜ.க நிர்வாகி கே.டி.ராகவன் சென்னை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

kt ragavan

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில துணைப் பொதுச்செயலாளரும், பல தனியார் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று வந்தவருமான கே.டி.ராகவன், செங்கல்பட்டு அருகே கோகுலபுரம் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் இதயத்திற்கு ரத்தம் செல்லும் குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பது மருத்துவர்களால் கண்டறியப்பட்டது.

உடனே சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

kt raghavan

இதனிடையே பாஜகவில் இருந்து அண்மையில் விலகிய நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில், “ஒன்றரை ஆண்டுகளாக அவதூறுக்கு ஆளானவர். சொந்தக் கட்சி உறுப்பினர் பழிவாங்கலால் ஹனி ட்ராப் மூலம் பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்டார். ஒரு முன்னாள் போலீஸ்காரர் வளர, சக்தி வாய்ந்த கே.டி.ஆர் ஐ கடந்து செல்ல அழுக்கு குறுக்கு வழியை எடுத்தார் முன்னாள் போலீஸ். கே.டி.ஆர் தனக்கு இப்படி செய்தவனை ஒரு போதும் அம்பலப்படுத்தவில்லை.

மனச்சோர்வு அவரை ஒன்றரை வருடங்களாக பாதித்திருக்கும். இன்று அவர் இதய அடைப்புக்கான மருத்துவமனையில் உள்ளார். மன அழுத்தம் மட்டுமே இதய நோயை ஏற்படுத்தும். விரைவில் குணமடையுங்கள். என் பிரார்த்தனைகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ