இந்தியாவின் பழங்கால வாழ்க்கை பற்றிய அறிக்கையை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதன் மூலம், தமிழர்களின் தொன்மையையும், பெருமையையும் அங்கீகரிக்க அவர்களுக்கு மனம் வரவில்லை எனவும், கீழடி அகழாய்வு அறிக்கையை ஏற்க வேண்டும் என எம்.பி.சு.வெங்கேடசன் தனது வலைதள பக்கத்தில் வலியுறுத்தியுள்ளாா்.மேலும் அவர் தனது பதிவில் , ” 2014 முதல் 2016 வரை கீழடியில் இரண்டாம் கட்ட அகழாய்வு செய்த அமர்நாத் ராமகிருஷ்ணன் 982 பக்க அறிக்கையை ஒன்றிய அரசுக்கு அனுப்பிவைத்துள்ளார். அந்த அறிக்கையின் படி கீழடி அகழாய்வில் கிடைத்த போருட்களை கார்பன் டேட்டிங் மூலம் பகுப்பாய்வு செய்ததில் சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன்பே தமிழரின் பண்டைய நாகரிகம் இருந்தது தெரியவந்துள்ளது. 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றிய அரசின் தொல்லியல் துறையிடம் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை சமர்பித்துள்ளாா். இதுவரை அந்த ஆய்வறிக்கையை வெளியிடவில்லை. கீழடி அறிக்கையை வெளியிடாதது பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது விரைவில் வெளியிடப்படும் என தொல்லியல் துறை உறுதி அளித்திருந்தது. ஆனால் தொல்லியல் துறை உறுதி அளித்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை அறிக்கை வெளியிடப்படவில்லை.
வரும் 27ம் தேதி நாடாளுமன்ற உறுதிமொழி குழு கூட்டம் நடைபெற உள்ளநிலையில், அப்போழுது கீழடி ஆய்வறிக்கை குறித்து கேள்வி எழுப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கீழடி அறிக்கையில் திருத்தம் கோரியுள்ளது ஒன்றிய அரசு. தற்போழுது, கீழடியில் முதல் 2-ம் கட்ட அகழாய்வு நடத்திய தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையில் திருத்தங்கள் செய்து மீண்டும் தாக்கல் செய்யும்படி திருப்பி அனுப்பியுள்ளது தொல்லியல் துறை.
தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும் என்றென்றும் பாஜக எதிரி எனவும் கீழடியின் உண்மைகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க ஒன்றிய தொல்லியல் துறை எளிதில் முன்வராது என எம்.பி.சு.வெங்கேடசன் குற்றச்சாட்டியுள்ளாா். புராணங்களை வரலாறாக மாற்ற நாள்தோறும் முயற்சிக்கும் மத்திய அரசு அதே வேகத்தோடு நமது வரலாற்றை மறைக்கவும் பணியாற்றிவருகின்றது. ” கீழடி தமிழர்களின் தாய்மடி” என்ற உண்மையை உரக்கச் சொல்வோம் என கூறியுள்ளாா்.
திருப்பூர்: மருந்தகத்தில் சிகிச்சை.. 3வது முறையாக சிக்கிய போலி மருத்துவர்..