spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவைகோவின் நெஞ்சுரத்தைப் பார்க்கும் போது அவருக்கு 28 வயது போல எண்ணத் தோன்றுகிறது – முதல்வர்...

வைகோவின் நெஞ்சுரத்தைப் பார்க்கும் போது அவருக்கு 28 வயது போல எண்ணத் தோன்றுகிறது – முதல்வர் புகழாரம்

-

- Advertisement -

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நடைபயணத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சியில் தொடங்கி வைத்தார்.வைகோவின் நெஞ்சுரத்தைப் பாா்க்கும் போது அவருக்கு 28 வயது போல எண்ணத் தோன்றுகிறது – முதல்வர் புகழாரம்திருச்சியில் இருந்து மதுரை வரை இன்று முதல் ஜனவரி 12ம் தேதி வரை வைகோ சமத்துவ நடைபயணம் மேற்கொள்கிறார். வைகோவின் நடைபயண நிகழ்ச்சியில் காதர் மொய்தீன், திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.  வைகோவின் சமத்துவ நடைபயணம் துவக்க விழாவுக்கு வந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு திமுகவினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நடைபயணத்தை திருச்சியில் தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினாா். அதில், “வைகோ மேற்கொள்ளும் சமத்துவ நடைப்பயணம் தான் இந்த ஆண்டில் எனது முதல் நிகழ்ச்சி. மக்கள் பிரச்சனைகளுக்காக நடைப் பயணம் சென்று இருக்கிறாா் அண்ணன் வைகோ. சமூக நல்லிணத்தை வலியுறுத்தி திருச்சி முதல் மதுரை வரை நடைப்பயணம் மேற்கொள்கிறாா். காலந்தோறும் இளையத் தலைமுறை நன்மைக்காகவும், எதிா்காலத்தின் நன்மைக்காகவும் செயலாற்றுவது திராவிட இயக்கம். திராவிட இயக்க பல்கலையில் படித்தவா் தான் வைகோ. கலைஞா் பக்கத்தில் இருந்து அரசியல் கற்றுக் கொண்டவா் வைகோ. மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கு நடைபயணம் சென்ற போது அவருடன் சென்றவா் தான் வைகோ.

we-r-hiring

வைகோவின் இந்த சமத்துவ நடைப்பயணம் மாபெரும் வெற்றி பெற வேண்டும். நிச்சயம் வெற்றிப் பெறத்தான் போகிறது. தலைவா்கள் மக்களிடம்  போய் தங்களது கருத்துகளை கூற நடைப்பயணம் உதவும். நடைப்பயணத்தின் நியாயம் குறித்து மக்கள் அப்போது தான் பேசுவாா்கள். முதுமையை முற்றிலும் தூக்கியெறிந்து விட்டு நடைப்பயணம் மேற்க்கொண்டுள்ளாா் வைகோ. வைகோவின் நெஞ்சுரத்தைப் பாா்க்கும் போது அவருக்கு 28 வயது போல எண்ணத் தோன்றுகிறது” என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

பொங்கல் – புதிய பண்பாட்டின் தொடக்கம்!

 

MUST READ