spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஹெச்.ராஜா மீதான 11 வழக்குகளை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

ஹெச்.ராஜா மீதான 11 வழக்குகளை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

-

- Advertisement -

ஹெச்.ராஜா மீதான 11 வழக்குகளை ரத்து செய்ய  உயர்நீதிமன்றம் மறுப்பு

பாஜக மூத்த தலைவர் ஹெ.ராஜா மீதான 11 வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பெரியார் சிலையை உடைப்பேன் என பதிவிட்டது, திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து தெரிவித்தது, அறநிலையத்துறை அதிகாரிகளின் குடும்பப் பெண்கள் குறித்து தவறாக பேசியது என பாஜகவின் எச்.ராஜா மீது தொடரப்பட்ட வழக்குகள் எதையுமே ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒன்றாக சேர்த்து, 3 மாதத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று கிழமைநீதிமன்றத்திற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

we-r-hiring

மேலும் “இவ்வாறு எச்.ராஜா பேசுவது முதல் முறை அல்ல. அவருடைய பேச்சு தனிப்பட்ட நபர்களை மட்டுமல்லாமல், அனைவரையும் பாதிக்க கூடிய வகையில் உள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அவர் பேசியுள்ளதால் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, நீதிமன்றமே தன்னிச்சையாக வழக்கு தொடர முடியும்” என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் காட்டமாக கருத்து தெரிவித்தார்.

MUST READ