
மகாத்மா காந்தியை நான் அவமதிக்கவில்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மீண்டும் இணையும் ஆர்யா, சந்தானம் கூட்டணி!
இது தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகாத்மா காந்தியை நான் அவமதிக்கவில்லை. காந்தியை நான் மதிக்கிறேன்; அவருடைய போதனைகள் எனது வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருந்தன. என் வாழ்க்கைக்கு ஒளி காட்டிய காந்தியின் போதனைகளை நான் மதிக்கிறேன். தேசத்தின் சுதந்திரத்திற்கு நேதாஜியின் பங்களிப்பை போதுமான அளவு பாராட்டவில்லை என்பதை விளக்க முயன்றேன்.
90s கிட்ஸ்-ன் காதல்…..ரக்ஷன் நடிக்கும் ‘மறக்குமா நெஞ்சம்’ டீசர் ரிலீஸ்…!
காந்தியை நான் அவமதித்துவிட்டதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. ஜனவரி 23- ஆம் தேதி நேதாஜி பிறந்தநாள் விழாவில் நான் பேசியதை ஊடகங்கள் சில திரித்து வெளியிட்டன. ஆங்கிலேயருக்கு எதிரான நேதாஜி படைகள் நமது கடற்படை, விமானப்படைக்கு உத்வேகத்தை அளித்தனர். நேதாஜியின் ஆயுதப் புரட்சி இல்லையென்றால் சுதந்திரம் கிடைக்க இன்னும் சில காலம் ஆகியிருக்கும்” எனக் குறிப்பிட்டுளளார்.