Homeசெய்திகள்தமிழ்நாடுஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான மெயின் தேர்வு இன்று தொடக்கம்..!

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான மெயின் தேர்வு இன்று தொடக்கம்..!

-

- Advertisement -

ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு இன்று தொடக்கம். சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று முதல் தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 1056 காலிப்பணியிடங்களை நிரப்ப சிவில் சர்விஸ் முதல்நிலை தேர்வு ஜூன் 16-ல் நடைபெற்றது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான மெயின் தேர்வு இன்று தொடக்கம்..!மெயின் தேர்வை நாடு முழுவதும் 24 நகரங்களில் மொத்தம் 14,627 பேர் தேர்வெழுதுகின்றனர். சென்னையில் 650 பேர் தேர்வு எழுதுகின்றனர். ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ். ஐஏஏஎஸ், ஐஐஎஸ் உள்ளிட்ட மத்திய அரசின் உயர் பதவிகளுக்காக சிவில் சர்வீசஸ் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (யுபிஎஸ்சி) நடத்தப்படும் இத்தேர்வு, முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, ஆளுமைத்திறன் தேர்வு என 3 நிலைகளை உள்ளடக்கியது. அந்த வகையில் இந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் பணிகளில் 1,056 காலியிடங்களை நிரப்புவதற்காக முதல்நிலைத்தேர்வு நடத்தப்பட்டு மெயின் தேர்வுக்கு மொத்தம் 14,627 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

MUST READ