நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 24 பேர் மீது அனுமதி இன்றி பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்துள்ளார்.


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மேனகா அனுமதி இன்றி கடந்த 20ம் தேதி ஆலமரத்துதெரு பகுதியில் பரப்புரை மேற்கொண்டதாக வேட்பாளர் உள்ளிட்ட 24 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா கட்சி நிர்வாகிகளுடன் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரை சந்தித்து மனு கொடுத்துள்ளார்.
அந்த மனுவில் திண்ணை பிரச்சாரத்திற்கு அனுமதி வாங்க வேண்டிய தேவையில்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திண்ணை பிரச்சாரத்திற்காக சென்ற என் மீது அனுமதி வாங்காமல் பரப்புரை மேற்கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கு பதிவை ரத்து செய்ய வேண்டும் அதேபோல் இனி வரக்கூடிய நாட்களில் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் மற்ற கட்சியினரை நடத்துவதைப் போல் நாம் தமிழர் கட்சியினரையும் நடத்த வேண்டும் என்றும் கூறி மனு அளித்துள்ளார்.

மேலும் திமுக கூட்டணி கட்சி காங்கிரஸ் வேட்பாளர் பிரச்சாரத்திற்கு அனுமதி வாங்கி பிரச்சாரம் செய்கிறார்களா என்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி கடிதத்தை கேட்டால் அனுமதி கடிதம் 2 மணிக்கு மேல் தருவதாக கூறுகிறார். இதிலிருந்து அவர்கள் அனுமதி இல்லாமல் தான் பிரச்சாரம் செய்வதாக தெரிய வருகிறது ஆனால் மக்களை சந்தித்து பிரச்சாரம் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பல்வேறு வகையான பரிசுப் பொருட்களையும் கொடுத்து வருகின்றனர் தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யக்கூடிய அளவிற்கு அவர்கள் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் வேட்பாளர் மேனகா குற்றம்சாட்டியுள்ளார்.
