spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று முதல் அனுமதி!

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று முதல் அனுமதி!

-

- Advertisement -

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று முதல் அனுமதி வழங்கி வனத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

we-r-hiring

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழைக் காரணமாக நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் செல்லும் வழியில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் குளிக்க வருவது வழக்கம். மேலும் இங்கு ஆர்ப்பரித்துக் தண்ணீர் கொட்டி கொண்டிருப்பதனால் சுற்றுலா பயணிகள் வருகை எப்பொழுதும் அதிகமாகவே இருக்கும்.

இந்த நிலையில் இது தொடர்பாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது தற்போது மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து குறைந்து இருப்பதால் நெல்லை மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் மணிமுத்தாறு அருவி மற்றும் மாஞ்சோலை சுற்றுலாதலங்களுக்கு செல்ல இன்று முதல் அனுமதி அளித்து வனத்துறை தரப்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

MUST READ