Homeசெய்திகள்தமிழ்நாடுமாஞ்சோலைத் தொழிலாளர்களை வெளியேற்றக் கூடாது.

மாஞ்சோலைத் தொழிலாளர்களை வெளியேற்றக் கூடாது.

-

- Advertisement -

தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த இடத்தை விட்டு பிரிய மனமின்றி தவித்த தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தற்காலிக தீர்வை தந்துள்ளது நீதிமன்றம்.மாஞ்சோலைத் தொழிலாளர்களை வெளியேற்றக் கூடாதுதிருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் 99 ஆண்டுகால ஒப்பந்தம் நிறைவடையுள்ளதால் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டன.

https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/we-are-taking-steps-to-prevent-drug-abuse-avadi-commissioner/93847

இதனை எதிர்த்து திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த அமுதா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது மாஞ்சோலை தேயிலை தொட்ட தொழிலாளர்களின் ஒப்பந்தம் நிறைவடைந்தாலும் அவர்களை தற்போது வெளியேற்றக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மாஞ்சோலைத் தொழிலாளர்களை வெளியேற்றக் கூடாதுதேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாற்று இடம் மற்றும் மறுவாழ்வு வழங்கும் வரை அவர்களை வெளியேற்றக் கூடாது என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் மனு குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறிய நீதிமன்றம் வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது.

MUST READ