போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டுகிறோம் என ஆவடி கமிஷனர் சங்கர் பேட்டி அளித்துள்ளார்.
ஆவடி காவல் ஆணையர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றவாளிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட 180 சவரம் நகை மற்றும் 36 செல்போன்களை உரியவர்களிடம் ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் ஒப்படைத்தார்.
ஆவடி காவல் கன்வென்ஷன் ஹாலில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். பின்பு ஆவடி அருகே முத்தாபுதுபேட்டை பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒன்றரை கோடி மதிப்புடைய தங்க நகைகளை துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்து சென்ற கொள்ளையர்களை பிடித்து சிறையில் அடைத்தனர், அந்த குற்றவாளிகளிடம் இருந்து மீட்கப்பட்ட 747 கிராம் தங்க நகைகளை மீட்டு கிருஷ்ணா ஜூவல்லர்ஸ் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
அதேபோல் மாங்காடு, ஆவடி போன்ற பகுதிகளில் வழிப்பறி மற்றும் கொள்ளை அடிக்கப்பட 36 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆவடி போக்குவரத்து துணை ஆணையாளர் ஜெயலட்சுமி, மத்திய குற்றப்பிரிவு துணை ஆனையாளர் பெருமாள் மற்றும் உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் சக காவலர்கள் கலந்து கொண்டனர்.
ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் அளித்த பேட்டியில், ஆவடி காவல் ஆணையம் பகுதிகளில் குற்ற சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குறிப்பாக மாங்காடு பகுதியில் நடைபெற்ற செயின் பறிப்பு குற்றவாளிகளை பீகார் சென்று கைது செய்துள்ளனர்.
அதேபோல் டேங்க் பேக்டரி பகுதியில் கொள்ளை சம்பவம் அந்த குற்றவாளிகளை டெல்லி சென்று பிடித்து வந்துள்ளனர், அதேபோல் முத்தா புதுப்பேட்டை பகுதியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் குற்றவாளிகளை ராஜஸ்தான் சென்று கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் பார்வைக்கு வைக்கப்பட்டு பின் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்றார்.
புதிய வரி விதிப்பின்படி விலக்கு வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படலாம் (apcnewstamil.com)
ஆவடி காவல் ஆணையரகம் உட்பட்ட பகுதிகளில் போதைப் புழக்கம் அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதைப்பற்றி பேசிய ஆவடி கமிஷ்னர், போதைப் பொருட்களை அதிக அளவில் பிடித்துள்ளோம். போதைப் பொருட்கள் அதிகம் புழங்குகிறது என்று சொல்ல முடியாது. இன்றைக்கு கூட வெள்ளவேடு பகுதியில் வாகன சோதனையின் போது 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து போதை பொருட்களின் மீது போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இன்றைக்கு வாகன சோதனையின் போது பிடிபட்ட போதைப்பொருட்கள் சவுத் மதுரை பக்கம் செல்லக்கூடியது. அதேபோல் அம்பத்தூர் பகுதியில் போதை மாத்திரைகள் பிடித்துள்ளதாகவும் ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குட்கா பொருட்களை விற்கும் கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், போதை பொருட்களின் மீது ஆவடி காவல் ஆணையரகம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார்.