Homeசெய்திகள்தமிழ்நாடுஆவின் நஷ்டத்தில் இயங்கவில்லை - அமைச்சர் மனோ தங்கராஜ்

ஆவின் நஷ்டத்தில் இயங்கவில்லை – அமைச்சர் மனோ தங்கராஜ்

-

ஆவின் நஷ்டத்தில் இயங்கவில்லை – அமைச்சர் மனோ தங்கராஜ்

ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கவில்லை, ஆவினில் மூலதன செலவுகளை உயர்த்தி இதர செலவுகளை குறைக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

m

உலக புகழ் பெற்ற குமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாக தேரோட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு பால்வள துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பால்வளத்துத்றையை பால் உற்பத்தியை பெருக்குவது, பால் கொள்முதலை அதிகரித்தல், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதல்களை பொருத்தமட்டில் சில விவசாய சங்கங்கள் தங்கள் கருத்துகளை அரசிடம் தெரிவித்துள்ளன. அதே கருத்துகளை தான் அரசும் எண்ணி கொண்டு இருக்கிறது. இந்த கோரிக்கைகள் முதல்வரின் பரிசீலனையில் தீவிரமாக இருக்கிறது. ஆகவே இவைகள் நிச்சயமாக வெகு விரைவில் நிறைவேறப்படும்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டே பால் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு தரமான பால் மலிவான விலையில் கொடுப்பதற்கான திட்டங்கள் ஒவ்வொன்றாக தீட்டப்படும். ஆவின் ஒரு தலை சிறந்த நிறுவனமாக வரும் . மேலும் தற்பொழுது 45 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் உள்ளது. இதன் திறனை இந்த ஆண்டு இறுதிக்குள் 70 லட்சம் லிட்டராக உயர்த்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. தேசத்திற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரமங்கைகள் குற்றச்சாட்டும் நபரை ஒன்றிய அரசு கைது செய்யாதது ஏன்? ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கவில்லை, ஆவினில் மூலதன செலவுகளை உயர்த்தி இதர செலவுகளை குறைக்க ஆலோசிக்கப்பட்டுவருகிறது” என்றார்.

MUST READ