Homeசெய்திகள்தமிழ்நாடு"மே 01- ஆம் தேதி முதல் தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தைத் தொட வாய்ப்பு"!

“மே 01- ஆம் தேதி முதல் தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தைத் தொட வாய்ப்பு”!

-

 

"தமிழகத்தில் வெப்ப அலை வீசும்"- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
File Photo

வட உள் தமிழகத்தில் மே 01- ஆம் தேதி முதல் மே 04- ஆம் தேதி வரை வெப்ப அலை உச்சத்தைத் தொட வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

அமரன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு… சென்னையில் தொடக்கம்…

செய்தியாளர்களிடம் பேசிய தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், “வரும் மே 01- ஆம் தேதி முதல் தமிழகத்தின் வட உள் மாவட்டங்களில் வெப்ப அலை உச்சத்தைத் தொடர் வாய்ப்புள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்ப அலை வீசும். மே 05- ஆம் தேதி உள் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்; தமிழகத்தில் 115 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பத்தின் அளவு பதிவாகக்கூடும் ” எனத் தெரிவித்துள்ளார்.

திருத்தணி முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!

அதைத் தொடர்ந்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களில் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் வரை உயரக்கூடும். 5 நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும். அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் 42 டிகிரி செல்ஸியஸ் வரை வெயில் கொளுத்தும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ