Homeசெய்திகள்தமிழ்நாடுமயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் சுதா நியமிக்கப்பட்டுள்ளார்

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் சுதா நியமிக்கப்பட்டுள்ளார்

-

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் சுதா நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கடந்த 16 ஆம் தேதி வெளியிட்டார். அதன்படி மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலில் 97 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1,82 கோடி முதல்முறை வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 49.7 பேரும், பெண் வாக்காளர்கள் 47.01 கோடி பேரும் உள்ளனர். 88.4 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேர் உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி கட்சியாக உள்ளது காங்கிரஸ் கட்சி. இதில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 10 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது வரை காங்கிரஸ் கட்சியானது 9 தொகுதிகளுக்கான வேட்பாளரை ஏற்கனவே அறிவித்துவிட்டது.. மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் நியமிக்கப்படாமல் இருந்தது. நாளையுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைவதால் .காங்கிரஸ் கட்சியின் மயிலாடுதுறை வேட்பாளராக வழக்கறிஞர் சுதா இன்று மாலை நியமிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அவர் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறார்.

 

MUST READ