Homeசெய்திகள்தமிழ்நாடுமயிலாடுதுறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!

மயிலாடுதுறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!

-

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நாடாளுமன்ற தேர்தலானது தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதியில் தமிழகத்தில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் மட்டும் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில் திமுக சார்பில் கூட்டணி மற்றும் கழக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மயிலாடுதுறையில் நாட்டை காத்திட – நாம் இழந்த உரிமைகளை மீட்டிட நம் கழகத் தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் குரலுக்கு வலுசேர்க்க, வரலாற்றுச் சிறப்புமிக்க மயிலாடுதுறை நகரில் இன்று பரப்புரை மேற்கொண்டோம்.மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சகோதரி சுதா அவர்களுக்கு ‘கை’ சின்னத்துக்கு ஆதரவாக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, ஒன்றிய பாசிச அரசுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர் என பொதுமக்களை கேட்டுக்கொண்டோம்.

MUST READ