தமிழகத்தில் புதிய அரசியல் கட்சியான தவெக-வின் அமைச்சர் கீர்த்தனா, மாற்றுத்திறனாளிகள் குறித்து ஊடகங்களில் பேசியது அவதூறாக உள்ளதாகக் கூறி, பல்வேறு தரப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர் கீர்த்தனா, பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் விதமாக சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தது தற்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற அரசு விழாவொன்றில் உரையாற்றிய அமைச்சர் கீர்த்தனா, மாற்றுத்திறனாளிகளைக் குறிப்பிடும்போது “ஊ****கள்” (அவதூறு வார்த்தை) எனப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அமைச்சரின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சரின் இந்தச் சொல்லாடலுக்கு மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். “மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஒரு அமைச்சர், சக மனிதர்களை, குறிப்பாக மாற்றுத்திறனாளிகளை இவ்வளவு தரம் தாழ்ந்து விமர்சிப்பது ஏற்புடையதல்ல” என்று கருத்து தெரிவித்துள்ளனர். என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையெனில் மாநிலம் தழுவிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று மாற்றுத்திறனாளிகள் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இந்தப் புகைப்படம் மற்றும் செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், இது குறித்து அமைச்சரின் தரப்பிலிருந்தோ அல்லது அரசிடமிருந்தோ முறையான விளக்கம் எதுவும் இதுவரை வரவில்லை.
அதிமுகவில் பிளவு: விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவித்த சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தரப்பு!
