தமிழ்நாட்டில் பாசிசத்துக் இடமில்லை என்பதை மக்கள் நிரூபித்து உள்ளனா் என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து மனித நேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா, “மனிதநேயத்தை காக்கும் வகையில் புதிய அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மக்களிடம் வரவேற்பை பெற்றன. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் நமது நாட்டில் 9 திட்டங்கள் மக்கள் நலனுக்காக செயல்பட்டு வருகின்றன. மாணவா்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளா்த்தது திமுக அரசு. வெறுப்பு பேச்சுக்கும், பிளவுவாத கருத்துக்கும் திமுக அரசு இடம் தரவில்லை.
மேலும், தமிழ்த்தாய் வாழ்த்து முதலிடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். நீட் தேர்வை தவெக அரசு எதிா்க்க வேண்டும். விஜய் தலைமையிலான அரசவையில் ஒரு இஸ்லாமியா் கூட இல்லாதது ஏமாற்றமே. தவெகவில் உள்ள 3 இஸ்லாமியா்களில் ஒருவருக்கு அமைச்சா் பதவி தர வேண்டும். இந்தியை திணிக்கும் பி.எம்.ஸ்ரீ. திட்டத்தை தவெக அரசு ஏற்க கூடாது” என புதிய அரசாக உள்ள தவெக அரசினை மனித நேய மக்கள் கட்சி தலைவா் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளாா்.
அடுத்த கட்சி எம்.எல்.ஏ.க்களை தூக்கும் கட்சி – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

