Homeசெய்திகள்தமிழ்நாடுமெட்ரோ ரயில் திட்டம்: அம்பத்தூர் OT வரை விரைந்து செயல்படுத்த வேண்டும் - ஜோசப் சாமுவேல்

மெட்ரோ ரயில் திட்டம்: அம்பத்தூர் OT வரை விரைந்து செயல்படுத்த வேண்டும் – ஜோசப் சாமுவேல்

-

- Advertisement -

சட்டப்பேரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அம்பத்தூர் திமுக எம்.எல்.ஏ. ஜோசப் சாமுவேல் சில கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.

மெட்ரோ ரயில் திட்ட பணிகளை அம்பத்தூர் ஓடி வரை விரைந்து செயல்படுத்த வேண்டும் - ஜோசப் சாமுவேல்

அப்போது பேசிய அவர், அம்பத்தூர் OT வரை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்து தர வேண்டும் என்றும் அம்பத்தூர் பகுதி முழுவதிலும் உள்ள உயர் அழுத்த மேல்நிலை மின்கம்பிகளை புதைவிடமாக மாற்றியமைத்து தர வேண்டும் எனவும் கூறினார்.

மெட்ரோ ரயில் திட்ட பணிகளை அம்பத்தூர் ஓடி வரை விரைந்து செயல்படுத்த வேண்டும் - ஜோசப் சாமுவேல்

மேலும் அம்பத்தூர் வாரியத்தில் உள்ள மாதானம் குப்பம் மற்றும் வார்டுகள் 79 முதல் 86 வரையிலுள்ள விடுபட்ட தெருக்களில் பாதாள சாக்கடை பணிகளை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்றும் சென்னை பாடி முதல் அம்பத்தூர் OT வரை சிடிஎச் சாலை மற்றும் ரயில்வே மேம்பாலத்தை விரிவு படுத்த வேண்டும் என்றார்.

நீட் தேர்வு தொடர்பான தமிழ்நாட்டின் எதிர்ப்புக் குரல் தற்போது நாடு முழுவதும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது – மு.க.ஸ்டாலின்! (apcnewstamil.com)

அதனை தொடர்ந்து அம்பத்தூர் பகுதியில் உள்ள டன்லப் தொழிற்சாலைக்கு அரசினால் வழங்கப்பட்ட ஆறு ஏக்கர் நிலம் கொண்ட விளையாட்டு மைதானத்தை அரசை திரும்ப பெற்றுக் கொண்டு அம்பத்தூர் தொகுதிக்கு சிறப்பான விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என்றும் கொரட்டூர் ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்தி தரவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

MUST READ