spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநீ்ட் தேர்வில் குழப்பம், குளறுபடி தொடர்ந்து நடக்கிறது - மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

நீ்ட் தேர்வில் குழப்பம், குளறுபடி தொடர்ந்து நடக்கிறது – மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

-

- Advertisement -

"மழைநீர் தேங்கியது ஏன்?"- அமைச்சர்கள் விளக்கம்!

நீட் தேர்வில் குழப்பம், குளறுபடிகள் தொடர்ந்து நடந்து வருவதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நீ்ட் தேர்வில் குழப்பம், குளறுபடி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடப்பாண்டில் நீட் தேர்வில் 67 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எப்படி முழு மதிப்பெண் பெற்றார்கள் என்பது குறித்து கேள்வி எழுப்பினால், கருணை மதிப்பெண் வழங்கப்படுள்ளது என கூறுகின்றனர். தாமதமாக வருவோரை அனுமதிக்காத நிலையில், பிறகு எப்படி நேரப் பற்றாக்குறை ஏற்பட்டது? நீட் தேர்வில் பெரிய மோசடி நடந்துள்ளது.

கண்டெய்னர் பெட்டியில் பிரியாணி கடை

உச்சநீதிமன்றம் எந்த இடத்திலும் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கவில்லை. நீட் தேர்வில் நடந்த குளறுபடியால் நாடு முழுவதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1500க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கி குளறுபடி நடந்துள்ளது. ஒரு கேள்வி விட்டிருந்தால் 716 மதிப்பெண் கிடைத்திருக்கும். ஒரு கேள்வி தவறாக எழுதியிருந்தால் 715 மதிப்பெண் கிடைக்கும். நீட் தேர்வில் 718, 719 மதிப்பெண்கள் என்பது சாத்தியமில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

 

MUST READ