Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

-

தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கேரளாவில் நிபா வைரஸ் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்ட கேரளா எல்லைகளில் சோதனை செய்யும் பணி நடைபெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Image

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள அரசு பொது மருத்துவமனை நீண்ட நாள் மக்களினுடைய கோரிக்கையை ஏற்று தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்துவதற்கு அடிக்கல் நாட்டுவதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் வருகை தந்தனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கேரளாவில் நிபா வைரஸ் தொற்று உள்ளது. அந்த நோய் தமிழகத்திற்குள் பரவாமல் இருக்க தமிழகத்தின் தமிழக கேரளா எல்லைப் பகுதியை கொண்ட ஆறு மாவட்டங்களில் உள்ள தமிழக கேரளா எல்லைப் பகுதியில் வரும் பயணிகளுக்கு ஆய்வு செய்த பின்னரே தமிழகப் பகுதிக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அவர் காய்ச்சல் அறிகுறி இருக்கும் பட்சத்தில் அதற்கான சிகிச்சையும் அளிக்கப்படும்.

தமிழகத்தில் அந்த தொற்று இதுவரை இல்லாத சூழ்நிலையில் அதை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கேரளாவில் இருந்து காய்ச்சல் அறிகுறிகளுடன் வருவோரை பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை” என்றார்.

MUST READ