ரத்தம் ஓவியம் வரைய தடை – அமைச்சர் மா.சு.
- Advertisement -
ரத்தம் ஓவியம் வரைய தடை – அமைச்சர் மா.சு.
காதலை வெளிப்படுத்தும் விதமாக ரத்தத்தில் ஓவியம் வரைவதால் நோய் தொற்றை ஏற்படுத்துவதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தற்போது, காதலை வெளிப்படுத்தும் விதமாக ரத்தத்தை ஓவியமாக வரையக்கூடிய புதிய கலாச்சாரம் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது என்றார். இவ்வாறு ரத்தத்தை பயன்படுத்து ஓவியம் வரைவதால் நோய் தொற்று பரவல் ஏற்படுகிறது. மேலும் இது போன்ற ஓவியங்களை வரைவதற்கு ரத்த ஓவியக் கூடங்கள் செயல்படுவதாவும், அதனால் ரத்த ஓவியம் வரைவதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்து இருக்கிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், புதிதாக வரும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதன் மூலம் கடந்த மாதம் பத்தாம் தேதி ஆயிரம் முகாம் நடத்தப்படுவதாகவும், று ஒரே நாளில் 1500 முகாம்கள் நடத்தப்பட்டதாகவும் அமைச்சர மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழகத்தில் 58 ஆயிரத்து 533 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் 23 லட்சம் பேர் பயன்பெற்று இருப்பதாகத தெரிவித்த அமைச்சர், தமிழகத்தில் தான் இன்சுலன்ஸா காய்ச்சல் மூலம் ஒருவர் கூட பலி ஆகாத நிலை உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.