Homeசெய்திகள்தமிழ்நாடுமகளிர் உரிமைகளை மீட்டு எடுத்து தந்த ஒரே இயக்கம் திமுக - அமைச்சர் மதிவேந்தன் பேட்டி!

மகளிர் உரிமைகளை மீட்டு எடுத்து தந்த ஒரே இயக்கம் திமுக – அமைச்சர் மதிவேந்தன் பேட்டி!

-

மகளிர் வாழ்வில் அனைத்து உரிமைகளையும் பெற்று பொருளாதாரத்தில் மேம்பட திமுக தொடர்ந்து பாடுபடும் என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் மனிதநேய திருவிழா சென்னை கிழக்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் அம்பத்தூர் தெற்கு பகுதி 88 வது வார்டில், 271 மரக்கன்றுகள் நடும் துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். மேலும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் 500 நபருக்கு பரிசுகளை வழங்கினர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது: தமிழக முதல்வர் மகளிருக்கு அதிக நலத்திட்டங்களை அறிவித்து பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளார். மகளிருக்கு சொத்தில் சம உரிமை, விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், அரசு வேலைவாய்ப்பில் 40 சதவீத இட ஒதுக்கீடு, உள்ளாட்சி பொறுப்புகளில் 33 சதவீதம் ஒதுக்கீடு, திருமண நிதி உதவி திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நடத்திக் கொண்டிருக்கிற ஒரே இயக்கம் திராவிட முன்னேற்ற கழக இயக்கம். அதுமட்டுமில்லாமல் மகளிர் வாழ்வில் அனைத்து உரிமைகளையும் பெற்று பொருளாதாரத்தில் மேம்பட திராவிட இயக்கமும், தமிழக முதல்வரும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் தொடர்ந்து பாடுபடுவோம் என கூறினார்.

MUST READ