spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசு மருத்துவமனையில் திடீர் சர்ப்ரைஸ் விசிட் அடித்த அமைச்சர்

அரசு மருத்துவமனையில் திடீர் சர்ப்ரைஸ் விசிட் அடித்த அமைச்சர்

-

- Advertisement -

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீரென்று சர்ப்ரைஸ் விசிட் அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.அரசு மருத்துவமனையில் திடீா் சர்ப்ரைஸ் விசிட் அடித்த அமைச்சா்கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ5.90 கோடி மதிப்பீட்டில் 15 இடங்களில் புதிய மருத்துவ கட்டிடங்கள் மற்றும் கட்டண படுக்கை பிரிவு திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கன்னியாகுமரியில் நேற்று தங்கியிருந்தார். இன்று காலையில் நெல்லை மாவட்டம் கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அமைச்சர் திடீரென்று சர்ப்ரைஸ் விசிட் அடித்தார். அங்கு பணியில் உள்ள டாக்டர் மற்றும் ஊழியர்களிடம் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து அங்கு தங்கியிருந்த நோயாளிகளிடம் அடிப்படை கட்டமைப்பு வசதி, சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார். அமைச்சரின் திடீர் விசிட்டால் கூடங்குளம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அம்பேத்கரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க அர்ஜூன் சம்பத்துக்கு அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம்

MUST READ