Homeசெய்திகள்தமிழ்நாடு“ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு என்பதை உச்சரிப்பதை பாவம் என்று நினைக்கிறார்” - அமைச்சர்...

“ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு என்பதை உச்சரிப்பதை பாவம் என்று நினைக்கிறார்” – அமைச்சர் ரகுபதி

-

- Advertisement -

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு என்பதை உச்சரிப்பதை பாவம் என்று நினைக்கிறார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நாகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீஹார், ஆந்திரா இல்லையென்றால் மோடி இல்லை. அதற்காகவே அவர்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன்பு கொண்டு வந்துள்ளோம். தொடர்ந்து குற்றவாளிகள் கைது செயப்பட்டு வருகிறார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுகவை முடிச்சிப்போட்டு பார்க்க வேண்டாம்”

“ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு என்பதை உச்சரிப்பதை பாவம் என்று நினைக்கிறார். தமிழ்நாடு என்ற பெயரை சொல்வதையே அச்சப்படும் நிதியமைச்சர் திருக்குறளையும், பாரதியாரையும் மறந்துவிட்டார். மோடியை தனி மெஜாரிட்டியில் வெற்றிபெற விடாமல் தடுத்தது இந்தியா கூட்டணி. ஒன்றிய அரசின் நிதி கிடைக்கவில்லை என்றாலும் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தமிழ்நாடு முதல்வர் தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு, செயல்பட்டு வருகிறார். என இவ்வாறு அவர் பேசினார்.

 

 

MUST READ