Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு!

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு!

-

- Advertisement -

 

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு!

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறையும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பதவியை இழந்தார் பொன்முடி!

சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்முடியின் அமைச்சர் பதவி மற்றும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிபோனது.

இதைத் தொடர்ந்து, பொன்முடி வகித்து வந்த இலாகாவை ராஜகண்ணப்பனுக்கு வழங்குவது குறித்து ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதனையேற்ற ஆளுநர் மாளிகை அமைச்சர்களின் இலாகா தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பதவியை இழந்தார் பொன்முடி: அடுத்தது என்ன?

அதில், தமிழக பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக உள்ள ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக, உயர்கல்வி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறைகள் ஒதுக்கப்பட்டது. ராஜகண்ணப்பன் கூடுதலாக அந்த துறைகளை இன்று (டிச.21) முதல் கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ