Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் பதவியை இழந்தார் பொன்முடி!

அமைச்சர் பதவியை இழந்தார் பொன்முடி!

-

- Advertisement -

 

அமைச்சர் பதவியை இழந்தார் பொன்முடி!

மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளார் பொன்முடி.

அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை!

கடந்த 2006- ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 1.75 கோடி சொத்து குவித்ததாக, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவுச் செய்தது. இந்த வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த சூழலில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடேசன் என்பவர், தாமாக முன்வந்து அமைச்சர் பொன்முடியின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார். இந்த வழக்கை அவர் தொடர்ந்து விசாரித்து வந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இவ்வழக்கை தொடர்ந்து விசாரித்து வந்த நிலையில், டிசம்பர் 19- ஆம் தேதி அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் குற்றவாளி என்றும், தண்டனை விவரங்கள் டிசம்பர் 21- ஆம் தேதியான இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அத்துடன், பொன்முடி 64.90% வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணம் ஆனதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று (டிச.21) காலை 10.00 மணிக்கு ஆஜராகினர். அதைத் தொடர்ந்து, நீதிபதி தண்டனை விவரங்களை வாசித்தார்.

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைவு!

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக தண்டனை விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி தரப்பு, டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, 30 நாட்களுக்கு தண்டனையை நிறுத்தி வைத்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளார் பொன்முடி. திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் பதவியை பொன்முடி இழந்ததாக சட்டப்பேரவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகை- கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

கடந்த 2014- ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கலவர வழக்கில் அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு இரண்டு ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டிருந்தது.

MUST READ