
கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
வருஷங்களுக்கு ஷேஷம் படத்தின் முதல் தோற்றம் வெளியானது
ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, பல்வேறு இடங்களில் இருந்து உள்ளூருக்கு மக்கள் படையெடுக்கின்றனர். இதனையொட்டி, கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
விஜய்சேதுபதி, கத்ரினாவின் கலக்கல் காமினேஷன்… முன்னோட்டம் வௌியானது…
சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம், தூத்துக்குடி மற்றும் வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்கும் மற்றும் இதர ஊர்களுக்கும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. ஒவ்வொரு நாளும் போக்குவரத்துத்துறை சார்பில் 2,100 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வரும் டிசம்பர் 22- ஆம் தேதி 350 பேருந்துகளும், டிசம்பர் 23- ஆம் தேதி 290 பேருந்துகளும் என மொத்தம் 640 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிட்டிருப்பதாக போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.