Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை!

அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை!

-

- Advertisement -

 

"பட்டமளிப்பு விழாக்கள் தாமதம் ஏன்?"- அமைச்சர் பொன்முடி விளக்கம்!
Photo: Minister Ponmudy

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு விதித்த 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகை- கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 1.75 கோடி சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்திருந்த நிலையில், இன்று (டிச.21) தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். அதைத் தொடர்ந்து, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 50 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

தனித்தீவாக மாறி இருக்கும் ஸ்ரீவைகுண்டம்!

அதேபோல், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, 30 நாட்களுக்கு தண்டனையை நிறுத்தி வைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

MUST READ