
ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுமே முற்றிலும் வெள்ள நீரால் சூழப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தின் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டு தனித்தீவானது. மேலும். 17, 11, 13 ஆகிய வார்டுகளும் இன்னும் முழுமையாக மீளாமல் இருக்கிறது.
விஜய்சேதுபதி, கத்ரினாவின் கலக்கல் காமினேஷன்… முன்னோட்டம் வௌியானது…
இந்த பகுதியில் பள்ளியின் சுவர்கள் முழுவதும் இடிந்து, தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அதிகமாக பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், எந்த நிவாரணமும் இதை சரி செய்ய முடியாது எனவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பேரூராட்சிப் பகுதிகளில் இருக்கக் கூடிய, அனைத்து வணிகக் கடைகளும் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இதையடுத்து, பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் மூன்று வேளை உணவு சமைத்துத் தருவதாக 17வது வார்டு கவுன்சிலர் வள்ளிமுத்து தெரிவித்துள்ளார்.
வருஷங்களுக்கு ஷேஷம் படத்தின் முதல் தோற்றம் வெளியானது
வரலாறு காணாத பாதிப்பால் மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். இதை அரசு கவனத்தில் கொண்டு உரிய இழப்பீடை வழங்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும். ரேஷன் கடைகளில் இருந்த அனைத்து அரிசி மூட்டைகளை வீணானது.