Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் செந்தில் பாலாஜி கைது வழக்கு- உச்சநீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது வழக்கு- உச்சநீதிமன்றம் உத்தரவு!

-

 

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
Photo: Minister Senthil Balaji

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் உத்தரவுக்கு எதிரான அமலாக்கத்துறையின் மேல்முறையீடு மனுக்களை, செந்தில் பாலாஜி வழக்குடன் இணைத்து விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

சென்னை வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில், இரண்டு நீதிபதிகளில் ஒருவர், அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை தவறு எனத் தீர்ப்பளித்திருந்தார். இதை எதிர்த்தும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை எதிர்த்தும் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

இந்த மனுக்கள் மீது ஏற்கனவே உத்தரவிடப்பட்டு, சென்னை உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி அமர்வுக்கு வழக்குகள் மாற்றப்பட்டிருந்தாலும், வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி உத்தரவு அளித்துள்ளதாகவும், அதன் மீது மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கை முடித்து வைக்குமாறும், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில்கோரப்பட்டுள்ளது. இதற்கு அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பா.ஜ.க.வுக்கு உதவுமா அண்ணாமலையின் பாத யாத்திரை?

அமலாக்கத்துறையின் கைது குறித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கெதிரான மேல்முறையீட்டு மனுக்களோடு சேர்த்து, இந்த வழக்குகளையும் இணைத்து ஜூலை 26- ஆம் தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

MUST READ