2024- ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து அடுத்தடுத்துக் கூட்டங்களை நடத்தி வருகிறது. அதேபோல், பா.ஜ.க. தலைமையும் ஆட்சியைத் தக்க வைக்கும் தலைமையில், கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இயக்குனர் விஷ்ணுவர்தனின் அடுத்த படம் குறித்த முக்கிய அப்டேட்!
இந்த நிலையில், தமிழக மக்களிடம் ஆதரவைப் பெறும் வகையில், ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, வரும் ஜூலை 28- ஆம் தேதி அன்று ராமேஸ்வரத்தில் இருந்து பாத யாத்திரையைத் தொடங்குகிறார். இதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தொடங்கி வைக்கவுள்ளார்.
234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் செல்லும் பாத யாத்திரை, அடுத்தாண்டு ஜனவரி 11- ஆம் தேதி சென்னையில் நிறைவடைகிறது. இந்த நிறைவு விழாவில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கலந்து கொள்ளவிருக்கிறார். இந்த நிலையில், அண்ணாமலை நடத்தும் பாத யாத்திரை பா.ஜ.க.வுக்கு எந்த அளவுக்கு கைகொடுக்கப் போகிறது என பரவலாகக் கேள்வி எழுந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடத்திய ஒற்றுமை நடைப்பயணத்தை விமர்சித்தவர்களில் ஒருவர் அண்ணாமலை, அப்படி இருக்கையில் இந்த யாத்திரை, அவருக்கு எப்படி கைக்கொடுக்கும் என விமர்சனங்கள் எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நேரடியாக செல்லத் திட்டமிட்டுள்ள அண்ணாமலை, மத்திய அரசின் திட்டங்கள், மக்களை முழுமையாகச் சென்றடைந்திருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, தமிழக அரசின் குறைகளையும் பொதுமக்களிடம் எடுத்துரைத்து, பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாத யாத்திரையின் இடையில் மத்திய அமைச்சர்கள், நேரடியாக களமிறங்கி பொதுக்கூட்டங்களை நடத்தவும் முடிவு செய்துள்ளதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
தனுஷ் பிறந்த நாளில் வெளியாகும் கேப்டன் மில்லர் டீசர்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஒன்பது நாடாளுமன்றத் தொகுதிகளை அ.தி.மு.க. தலைமையிடம் இருந்து கேட்டுப் பெற பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.